நாம் பெரும்பாலும் நமது கணினிகளில் Traditional Hard Drive களையே பயன்படுத்துகிறோம். இந்த Hard Drive களுல் ஒன்றிற்கு மேற்பட்ட சுழலும் தட்டுகளும் அதன் மேல ஒரு பக்கம் மட்டும் நகரும் படியான ஒரு கம்பியும் இருக்கும்.
இந்த சுழலும் தட்டுகளுக்கு Platter எனப் பெயர். இந்தப் Platter இல் தான் நமது தகவல்கள் மின்-காந்த சக்தியின் துணைகொண்டு சேமித்து வைக்கப்படுகிறது. ஒரு பிளாட்டரின் இருபக்கமும் தகவல்களைச் சேகரிக்கலாம். இந்த பிளாட்டர்கள் ஒரு மோட்டாரில் இணைக்கப்பட்டு அதன் மூலம் வேகமாக சுழன்று கொண்டிருக்கும். இதன் வேகம் எவ்வளவு என்றால் ஒரு நிமிடத்திற்கு 3600 அல்லது 5400 அல்லது 7200 அல்லது 15,000 முறைகள். தற்போது வாடிக்கையாளர் புழக்கத்தில் 5400 மற்றும் 7200 வேகத்திலும், சர்வர் புழக்கத்திற்கு 15,000 வேகத்திலும் பயன்பாட்டில் உள்ளன.
இந்த பிளாட்டர்களுக்கு மேலும், கீழும் ஹெட்டர் பின்கள் பொருத்தப் பட்டிருக்கும். இந்த ஹெட்டர் பின்கள் பிளாட்டருக்கு வெகு நெருக்கமாகப் பொருத்தப் பட்டிருக்கும். ஆனால் எக்காலத்திலும் பிளாட்டரைத் தொடாது. இந்த ஹெட்டர் பின்னானது ஒரு மோட்டாரில் Actuator என்னும் சாதனத்தால் இணைக்கப்பட்டிக்கும். இதனால் ஹெட்டர் பின் பிளாட்டரின் மேலே மற்றும் கீழ 45 டிகிரி வரை நகர்ந்து நகர்ந்து தகவல்களை அதில் பதியவும், வாசிக்கவும், அழிக்கவும் செய்யும்.
இவ்வகை Traditional Hard Drive களில் நகரும் சாதனங்கள் இருப்பதால் இதன் வேகம் குறைவாகவும், எடை அதிகமாகவும் இருக்கும். ஆனால் இதன் விலை Solid State Drive களை விடக் குறைவு.
Solid State Drives
இதனுள் நகரும் சாதனங்கள் எதுவும் கிடையாது. எடை மிகவும் குறைவு. வேகம் குறைந்தபட்சம் 3.5 மடங்கு Traditional Hard Drive களை விட அதிகம்.
தகவல் சேமிப்பிற்கு Traditional Hard Drive கள் காந்தத் தகடுகளான பிளாட்டர்களைப் பயன்படுத்தும் வேளையில் SSD கள் Flash Memory சிப்களைப் பயன்படுத்துகிறது. இதனால் ஹெட்டர் பின்கள் பிளாட்டர் மேல் நகர்ந்து தகவல்களை தேட, பதிய வேண்டிய அவசியம் இல்லாதபடியால் வேகம் அதிகப்படுகின்றது.
நம் அன்றாடக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் Traditional Hard Drive களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதற்குப் பதிலாக SSD கள் பயன்படுத்தினால் நமது கணிணிக்கள் குறைந்தபட்சம் 3 மடங்கு வேகமாக இயங்கும்.
அதாவது Traditional HDD கொண்ட ஒரு புதுக் கணினி ஆன் ஆக 8 நொடிகள் எடுத்துக் கொண்டால் SSD கொண்ட ஒரு புதுக் கணிணி வெறும் 3 நொடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும். மேலும் பல்வேறு மென்பொருட்களும் வேகமாக இயங்கும்.
விலை:
Traditional HDD 1000 GB – தோராயமாக ₹ 3500.
3D NAND SSD 500 GB – தோராயமாக ₹ 7000.