அனுமன் வாயுதேவனின் குமாரன். அவருக்கு நீ ஒரு தடங்களைச் செய்ய வேண்டும். ஒரு அரக்கியின் உருவத்தை எடுத்துக் கொண்டு மலையைப் போல பிரம்மாண்டமாய், பயங்கரமாய், கோரைப் பற்கள் வெளியே தெரிய கண்கள் சிவந்து கொண்டு, வாயை வெகு விகாரமாகப் பிளந்து கொண்டு அனுமன் முன்னே தோன்ற வேண்டும். அப்போது அனுமன் உன்னை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும். இது அவருக்கான ஒரு பரீக்ஷை.