Sargam Two

அனுமன் இலங்கைக்குள் பிரவேசித்தலும் இலங்கையின் அழகைக் கண்ணுருதலும்

சீதையைப் பார்க்க முடியுமா என்ற கவலை ஒருபுறமும், அவரைக் கண்டு விடலாம் என்ற மகிழ்ச்சி ஒருபுறமும் அஞ்சனை மைந்தனுக்கு இருந்தது. தங்கமயமாக இருந்த லங்கை ராவணனுடைய புஜபல பராக்ரமத்தாலும், வீரம் கொண்ட அரக்கர்களாலும் பாதுகாக்கப்பட்டது.

லங்கைக்குள் நுழைவது குறித்து அனுமன் சிந்தனை செய்தல்

அரக்கர்களுக்குத் தெரியாமல் எந்த இடத்திலும் இருக்க இயலாது. அரக்கர் உருவம் கொண்டால் கூட அவர்கள் கண்ணில் படாமல் இருக்க முடியாது. இங்கு அவர்களுக்குத் தெரியாமல் காற்று கூட சஞ்சரிக்க இயலாது போல இருக்கிறது. என்னுடைய சுய வடிவமான மிகப் பெரிய குரங்கு வடிவத்தில் இங்கு இருந்தால் நான் நிச்சயம் அழிந்து போவேன். எனது எஜமானரின் காரியமும் கெட்டுப் போகும். எனவே இப்போது நான் இருக்கும் மிகப் பெரிய பரிமாணத்தைச் சுருக்கிக் கொண்டு சிறிய வடிவை ஏற்று இரவில் லங்கைக்குள் செல்வது தான் சுலபமான வழி. ராமரின் காரியமும் கைகூடும்

இரவு வரும் வரை அனுமன் காத்திருத்தல்

தற்காப்பு அமைப்புகள் பலமாக இருக்கின்றன, ராவணனும் சாதாரண எதிரி அல்ல. இங்கு தேவர்கள் கூட சுலபமாக யுத்தத்தில் வென்று விட முடியாது”, என நினைத்துக் கொண்டார். “அரக்கர்களின் நகரத்தினுள் இந்த உருவத்தோடு நுழையக் கூடாது. ஸீதையைத் தேடி வந்துள்ள நான் அவர்களை சாமர்த்தியமாக ஏமாற்றியே ஆக வேண்டும். லங்கையில் இரவில் தான் பிரவேசிக்க வேண்டும். சமயத்திற்கேற்றார்போல என் உருவத்தைக் காட்டியும், காட்டாமலும் இருக்க வேண்டும். மிகப் பெரிய பணியைச் செய்ய வேண்டியுள்ளதால் சமய சந்தர்ப்பம் பார்த்து தான் உள்ளே நுழைய வேண்டும்.

Scroll to top