ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து போவது Hypoxia எனப்படும். இது பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். Hypoxia ஏற்படும் சமயத்தில் ஒருவர் மூச்சு விடும் வேகம் அதிகரிக்கத் துவங்கும். Hypoxia ஏற்பட்டிருந்தாலும் எவ்வித உடல் பிரச்சினைகளும் வெளிப்படையாகத் தெரியாமல் சாதாரணமாக ஒருவர் இருக்கும் நிலைக்கு Happy Hypoxia அல்லது Silent Hypoxia எனப் பெயர்.