ஆஞ்சநேயர் ஸமுத்திர ராஜன் மற்றும் மைனாகப் பர்வதத்தைக் கௌரவித்தலும், இந்திரன் மைனாகனுக்கு வரமளித்தலும்
ஸமுத்திர ராஜனால் தூண்டப்பட்ட மைனாகப் பர்வத சிரேஷ்டன் இவ்வாறு அன்பு கொண்டு கூறிய வார்த்தைகளால் மகிழ்ந்தார் வானரோத்தமன். அன்போடு தன்னுடைய கையினால் அம்மலையைத் தொட்டு புன்முறுவல் பூத்து, மனம் மகிழ்ந்து ஆகாச மார்க்கத்தில் தன் பயணத்தைத் தொடர்ந்தார். மைனாகனின் செயலினைக் கண்ட தேவேந்திரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.