நந்தகோபரின் உறவினர் அக்ரூரர். கம்சனிடம் அரசவைப் பணியாளராக இருந்தார் அக்ரூரர். கண்ணன் மேலே மிகுந்த பக்தி கொண்டவர். கண்ணனைக் கொல்லத் திட்டம் தீட்டிய கம்சன் அவரை அழைத்து வர நம்பகமான ஒருவரைத் தேடியபோது அவனுக்கு அக்ரூரரைப் பற்றிய நினைவு வர, அக்ரூரரை அழைத்து கண்ணனைக் கூட்டி வரச் சொன்னான்.
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்
ஸ்ரீ வைத்தமாநிதி பெருமான் கோவில் கொண்ட திருத்தலம் திருக்கோளூர். அப்பெருமானை சேவிக்க உடையவர் வந்த சமயம் ஒரு பெண்பிள்ளை சோகத்தோடு வெளியேறினாள். அவள் வெளியேற கூறிய காரணங்களே திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்.
கண்ணன் அப்பூச்சி காட்டுதல்
கண்ணன் எம்பெருமான் பிறந்த சமயத்திலேயே நான்கு தோள்களோடு சங்கு சக்கரம் ஏந்திப் பிறந்தான். எனினும் அது கண்ட பயந்த தேவகி கேட்டுக் கொண்டதற்கிணங்க தன் இரு புஜங்களை மறைத்துக் கொண்டு சாதாரண குழந்தையாகவே தன்னைக் காட்டிக் கொண்டான்.