தொல்வினை

தொல்வினைகள் தொலைந்து போக

1. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். திருப்பிரமபுரம். இது சீகாழி எனப் பிரசித்தமாய் வழங்கப்படும் தலம். சீர்காழி என்றும் வழங்கப்படுகிறது. விழுப்புரம் – மாயவரம் மார்க்கத்தில் சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து அரை மைல் தொலைவில் உள்ளது. பண்: நட்டபாடை. 1 ஆம் திருமுறை. திருச்சிற்றம்பலம். தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1) முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் […]

Scroll to top