இலங்கை குறித்து அனுமன் சிந்தனை செய்தல்

இலங்கையில் வளம், இலங்கையில் காவல், இலங்கை நகரம் அமைந்துள்ள விதம் யாவையும் கண்டு கொண்டே வந்த அனுமன் சிந்திக்கலானார். “இந்த நகரம் ஆயுதங்களை ஏந்திய ராவணனின் சேனையால் நன்றாகப் பாதுகாக்கப் படுகிறது. இந்நகரத்தை யாரும் எவ்வகையான பலம் கொண்டும் சுலபத்தில் தாக்க இயலாது. இங்கே வரும் திறமை கொண்டவர்கள் சிலரே. குமுதன் அங்கதன் சுஷேணன், மைந்தன், த்விவிதன் முதலானோர் கீர்த்தி மிக்கவர்கள். அவர்களால் தான் இந்நகரை அணுக இயலும். மேலும் சூரிய புத்திரரான சுக்ரீவன், குசபர்வன், கேதுமாலன், என் போன்ற சில வானரர்களால் தான் இங்கு வர முடியும். எனினும் நெடிய தோள்களையுடைய ராமனுடைய பராக்கிரமம், மற்றும் லக்ஷ்மணரின் வீரம் ஆகியவற்றை சிந்தித்த அனுமன் திருப்தி அடைந்தார். பேரிகை முதலான வாத்தியங்களில் ஒலிகள் ஒரு பக்கமும், மக்கள் அணிந்திருந்த அணிகலண்களின் சலசலப்புகள் ஒரு பக்கமும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. லங்கை முழுவதும் தீபங்களின் ஒளி வெள்ளத்தால் எங்கும் இருட்டே இல்லாமல் பிரகாசமாக இருந்தது. லங்கைக்கு அதிஷ்டான தேவதையாக லங்காதேவி என்ற அரக்கி ஒருவள் இருந்தாள். அவள் தன் சுயரூபத்தோடு இருந்தாள்.

இலங்கை குறித்து அனுமன் சிந்தனை செய்தல்
Scroll to top