கூகுள் நிறுவனம் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை, இந்தியாவின் Digital Economy யின் வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தியாவின் Digitization Fund க்கு அளிக்கிறது. இதை அந்நிறுவனத்தின் CEO திரு சுந்தர் பிச்சை இன்று அறிவித்துள்ளார்.
நான்கு வருடங்களுக்கு முன்னே சிறு வியாபாரங்களில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே இணையவழியில் தன் பங்களிப்பைக் கொண்டிருந்தது. ஆனால் இன்றைய தினத்தில் சுமார் 26 மில்லியன் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் இணையவழியில் தங்கள் பங்களிப்பைக் கொண்டு வந்துவிட்டன. இதன் மூலம் மாதத்திற்கு 150 மில்லியன் வாடிக்கையாளர்கள் சிறு மற்றும் குறு வியாபாரங்களின் இணைய வழிப் பங்களிப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
தற்போதைய கொரோனா பெருந்தொற்று பிரச்சினை, இணைய வழிப் பங்களிப்பிற்கு மேலும் ஒரு பெரிய காரணியாய் அமைந்துள்ளது. உதாரணமாக முழுஅடைப்புக் காலங்களில் மக்கள் தங்கள் தேவைகளுக்கு இணையத்தைப் பயன்படுத்துகின்றனர், ஆன்லைன் மூலம் பணம் செலுத்துகின்றனர்.
இந்த முன்னேற்றம் யாவும் வலுவான இணையக் கட்டமைப்பினால் சாத்தியப்பட்டுள்ளது. பாரதத்தின் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் Digital India விற்கான தொலைநோக்குக் கனவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் 1 பில்லியன் இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குறைந்த விலை ஸ்மார்ட்போன், சாதகமான விலையில் இணையம், உலகத்தரம் வாய்ந்த இணையக் கட்டமைப்பு யாரும் இந்தப் புது வாய்ப்புகளுக்கு வித்திட்டுள்ளது.
2004 முதல் கூகுள் நிறுவனம் இந்தியாவின் இணையப் பயணத்தோடு உடன் வருகிறது. அப்போதே ஹைதிராபாத் மற்றும் பெங்களூருவில் கூகுளின் அலுவலகங்கள் தொடங்கப்பட்டு Google Search மூலம் இந்திய மக்களோடு தொடர்பில் உள்ளது.
கூகுளின் இந்தியாவிற்கான முயற்சிகள் யாவும் பலதரப்பட்ட மக்கள் தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்ற புரிதலை எங்களுக்கு அதிகப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்காக நாங்கள் கட்டமைக்கும் தொழில்நுட்பம் மற்ற நாடுகளுக்காக இன்னும் சிறப்பானவைகளை வடிவமைக்க உதவியுள்ளது. இதற்கு ஒரு சிறப்பான தற்போதைய உதாரணமாக Google Pay ஐ சொல்லலாம். மேலும் Read Along போன்ற அப்ளிகேஷன்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Google for India Digitization Fund
இந்தியாவின் இணையவழி பயணம் இன்னும் முழுவதும் வளர்ந்த நிலையை எட்டுவதற்கு நீண்ட தூரம் உள்ளது. இன்றைய தினத்தில் கூகுள் இந்தியாவின் Digitization க்கு சுமார் 75,000 கோடி ரூபாய்களை அடுத்த 5 முதல் 7 வருடங்களில் முதலீடு செய்ய உள்ளது.
இந்த முதலீடு இந்தியாவின் Digitization க்கு முக்கியமான குறிப்பிட்ட 4 தொகுதிகளில் இருக்கும்.
- மக்கள் தங்களுக்கு ஏதுவான மொழியில் சாதகமான முறையில் தகவல் பெற கட்டமைப்பு.
- இந்தியாவின் தனித்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான product மற்றும் service களை உருவாக்குதல்.
- இணைய வழியில் பங்கெடுக்க வியாபாரங்களை ஊக்குவித்தல், வாய்ப்புகளை உருவாக்குதல்.
- ஆரோக்கியம், கல்வி மற்றும் விவசாயம் ஆகியவற்றில் Artificial Intelligence இன் பங்களிப்பை அதிகரித்தல்.
இவ்வகை முதலீடுகளைச் செய்யும் அதே நேரத்தில் இந்தியாவின் Digital Vision ஐ நினைவாக்கும் பொருட்டு, பிரதமர் திரு மோடி, இந்திய அரசாங்கம் மற்றும் இந்தியாவின் அனைத்துத் தரப்பிலான நிறுவனங்கள் ஆகியவற்றோடு இணைந்து பணியாற்ற கூகுள் விரும்புகிறது.