சக்ரத்தாழ்வார் வைபவம்

Read this in English: Chakrathaazhwar.

திருமாலுக்குப் பிரதானமாக ஐந்து ஆயுதங்கள் உண்டு. ஆகையால் அவருக்குப் பஞ்சாயுதன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அந்த ஐந்து ஆயுதங்கள்,

1. சுதர்சனச் சக்கரம் என்ற சக்கரத்தாழ்வார்.
2. பாஞ்சஜன்யம் என்ற சங்கு.
3. சார்ங்கம் என்றழைக்கப்படும் வில்.
4. நந்தகம் எனும் வாள்.
5. கௌமேதகம் எனும் கதை.

வனமாலி கதீ சார்ங்கி சங்கி சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாசுதேவோ (அ)பிரக்ஷது

என்று ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் இதன் பொருள், “எங்கும் பரவி இருப்பவரும், அனைவருக்குள்ளும் உறைபவருமானவர் வனத்தின் மலர்களை மாலையாக அணிந்துள்ளார். சக்க்ரம், சங்கு, வில், வாள், கதையை உடைய அவர் நம்மைக் காக்கட்டும்”.

திருமால் தன் சங்கல்ப்ப சக்தியை ஒரு ஆயுதமாக உருவாக்கி, அதை ஆயுதங்களின் அரசனாக ஆக்கினார். அதுவே ஸ்ரீசுதர்சனச் சக்கரம் ஆகும். ஆயுதங்களின் அரசன் என்பதால் இவருக்கு “ஹேதி ராஜன்” எனும் திருநாமம் கிட்டியது. சக்கரத்தாழ்வார் திருமாலின் பிரதான ஆயுதமானாலும், அவர் தன்னிடம் 16 ஆயுதங்களைக் கொண்டிருப்பார். அவை,

  1. சக்கரம்
  2. பாஞ்சஜண்யம்
  3. சார்ங்கம்
  4. வஜ்ராயுதம்
  5. கதை
  6. மால்
  7. குந்தம்
  8. தண்டம்
  9. அங்குசம்
  10. சதாமுகாக்கனி
  11. மிஸ்கிரிசம்
  12. வேல்
  13. பாசம்
  14. கலப்பை
  15. உலக்கை
  16. திரிசூலம்

ஆகும்.

பெரியாழ்வார் திவ்வியப் பிரபந்தத்தில் பல்லாண்டு பாடும் பொழுது,

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு*
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு*
படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. (2)

என்று சக்கரத்தாழ்வாரைக் குறிப்பிடுகிறார்.

சுவாமி ஸ்ரீ வேதாந்த தேசிகன், சுதர்சனாஷ்டகம் எனும் நூலினை இயற்றியுள்ளார். மிகவும் சக்திவாய்ந்த இந்த நூலினை பக்தியோடு பாராயணம் செய்தால், எதிரிகளால் ஏற்படும் தொல்லை, ஆரோக்கியக் குறைபாடுகள், வறுமை ஆகியன நீங்கப் பெற்று வளமான வாழ்வினை மேற்கொள்ளலாம்.

சுதர்சன அஷ்டகம்

ஶ்ரீமதே நிகமாந்த மஹாதேஶிகாய நம:

ஶ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்கிக கேஸரீ ।
வேதந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ॥

ப்ரதிபடஶ்ரேணிபீஷண வரகுணஸ்தோமபூஷண
ஜநிபயஸ்தாநதாரண ஜகதவஸ்தாநகாரண ।
நிகிலதுஷ்கர்மகர்ஶந நிகமஸத்தர்மதர்ஶந
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ॥ 1 ॥

ஶுபஜகத்ரூபமண்டந ஸுரஜநத்ராஸகண்டந
ஶதமகப்ரஹ்மவந்தித ஶதபதப்ரஹ்மநந்தித ।
ப்ரதிதவித்வத்ஸபக்ஷித பஜதஹிர்புத்ந்யலக்ஷித
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ॥ 2 ॥

நிஜபதப்ரீதஸத்கண நிருபதிஸ்பீதஷட்குண
நிகமநிர்வ்யூடவைபவ நிஜபரவ்யூஹவைபவ ।
ஹரிஹயத்வேஷிதாரண ஹரபுரப்லோஷகாரண
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ॥ 3 ॥

ஸ்புடதடிஜ்ஜாலபிஞ்ஜர ப்ருதுதரஜ்வாலபஞ்ஜர
பரிகதப்ரத்நவிக்ரஹ பரிமிதப்ரஜ்ஞதுர்க்ரஹ ।
ப்ரஹரணக்ராமமண்டித பரிஜநத்ராணபண்டித
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ॥ 4 ॥

புவநநேதஸ்த்ரயீமய ஸவநதேஜஸ்த்ரயீமய
நிரவதிஸ்வாதுசிந்மய நிகிலஶக்தேஜகந்மய ।
அமிதவிஶ்வக்ரியாமய ஶமிதவிஶ்வக்பயாமய
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ॥ 5 ॥

மஹிதஸம்பத்ஸதக்ஷர விஹிதஸம்பத்ஷடக்ஷர
ஷடரசக்ரப்ரதிஷ்டித ஸகலதத்த்வப்ரதிஷ்டித ।
விவிதஸங்கல்பகல்பக விபுதஸங்கல்பகல்பக
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ॥ 6 ॥

ப்ரதிமுகாலீடபந்துர ப்ருதுமஹாஹேதிதந்துர
விகடமாலாபரிஷ்க்ருத விவிதமாயாபஹிஷ்க்ருத ।
ஸ்திரமஹாயந்த்ரயந்த்ரித த்ருடதயாதந்த்ரயந்த்ரித
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ॥ 7 ॥

தநுஜவிஸ்தாரகர்தந தநுஜவித்யாவிகர்தந
ஜநிதமிஸ்ராவிகர்தந பஜதவித்யாநிகர்தந ।
அமரத்ருஷ்டஸ்வவிக்ரம ஸமரஜுஷ்டப்ரமிக்ரம
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶந ॥ 8 ॥

த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்
படதாம் வேங்கடநாயகப்ரணீதம் ।
விஷமே(அ)பி மநோரத꞉ ப்ரதாவந்
ந விஹந்யேத ரதாங்கதுர்யகுப்த꞉ ॥ 9 ॥

இதி ஶ்ரீ வேதாந்தாசார்யஸ்ய க்ருதிஷு ஸுதர்ஶநாஷ்டகம் ।

சக்ரத்தாழ்வார் வைபவம்
Scroll to top