Sundara Kaandam

சமுத்திர ராஜனும் மைனாகப் பர்வத சிரேஷ்டரும் அனுமனுக்குச் சகாயம் செய்ய விழைதல்

இஷ்வாகு குலத்தின் உத்தமரான ஸ்ரீராமருக்குக் கைங்கர்யமாய் சமுத்திரத்தைக் கடந்து கொண்டிருக்கும் வானர குல சிரேஷ்டரான அனுமனை கௌரவிக்க சமுத்திர ராஜன் யோசனை செய்தான். அதன் பின்னர் தன்னுள் மறைந்திருக்கும் மைனாகப் பர்வத சிரேஷ்டனைப் பார்த்து, “நமது கௌரவமிக்க விருந்தாளியான அனுமன் உன்மீது இளைப்பாறி செல்ல ஏதுவாக நீ மேலெழுந்து வருவாயாக” எனக் கேட்டுக் கொண்டான். சமுத்திர ராஜனின் வார்த்தைகளைக் கேட்ட மைனாகப் பர்வதம் கடல் நீரைக் கிழித்துக் கொண்டு மேலே எழும்பியது.

அனுமன் ஆகாசத்தில் பறக்கும் காட்சியின் வர்ணனைகள்

இவ்வாறு அனுமன் ஆகாசத்தில் தெற்கு நோக்கிப் பறந்து கொண்டிருப்பது, வடதிசையிலிருந்து தென் திசை நோக்கி ஒரு வால் நக்ஷத்திரம் விழுந்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திற்று. வால் நக்ஷத்திரம் தோன்றுவதென்பது அரசனுக்கு அபாயம் ஆகும். இவ்வாறு அனுமன் லங்கையை நோக்கித் தென் திசையில் சென்று கொண்டிப்பது லங்கையின் அரசனுக்கு ஆபத்து என்பதை உணர்த்துவதாய் இருந்தது. உயரே பறக்கும் அனுமனுடைய நிழல் கீழே அவருக்கேற்ப சமுத்திரத்தில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பார்க்கையில் பாய்மரம் கொண்டு கட்டப்பட்ட ஒரு […]

மாருதி ஆகாய மார்க்கமாக தன் பயணத்தைத் தொடங்குதல்.

மாருதி தன் உடல் ரோமங்களைச் சிலிர்த்துக் கொண்டார். நீரைக் கொண்ட கரிய மேகம் போல கர்ஜித்தார். அடிமுதல் நுனிவரை முடிகளைக் கொண்ட தன் வாலினை சுழற்றி உதறினார். நீண்டு பெரியதாய் இருந்த அவருடைய வாலானது பெரிய சர்ப்பம் போல இருந்தது. வெகுதூரம் வரையில் தான் செல்ல வேண்டிய இடத்தினை நிமிர்ந்து உற்று பார்த்து தன் இதயத்தில் பிராணவாயுவை நிறுத்திக் கொண்டார். பின்னர் ஆகாசத்தில் தாவும் முன்னர் வானர வீரர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறலானார், “வாயு வேகமுள்ள ராமபாணம் […]

சமுத்திரத்தைத் தாண்ட அனுமன் ஆயத்தம் ஆதல்!

ஜாம்பவானால் தூண்டப்பட்ட ஆஞ்சநேயர் சாரணர்கள் சஞ்சரிக்கும் ஆகாய மார்க்கத்தில், ராவணனால் அபகரித்துச் செல்லப்பட்ட தேவி சீதை இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க விரும்பினார். அளவற்றதாய் சரீரத்தை வளர்த்துக் கொண்ட ஆஞ்சநேயர், சமுத்திரத்தைத் தாண்ட, அம்மலையை தன்னுடைய கரங்களாலும் கால்களாலும் அழுத்தினார்.

Scroll to top