Sundara Kaandam

லங்காதேவியை அனுமன் வெற்றி கொள்ளுதல்

லங்காதேவி பார்ப்பதற்கு விகாரமாக இருந்தாள். அவள் லங்கையின் காவல் தெய்வமாக நியமிக்கப்பட்டிருந்தாள். லங்கைக்குள் புகுந்த அனுமனை ஓங்கி அறைந்தாள் லங்காதேவி.

இலங்கை குறித்து அனுமன் சிந்தனை செய்தல்

பேரிகை முதலான வாத்தியங்களில் ஒலிகள் ஒரு பக்கமும், மக்கள் அணிந்திருந்த அணிகலண்களின் சலசலப்புகள் ஒரு பக்கமும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. லங்கை முழுவதும் தீபங்களின் ஒளி வெள்ளத்தால் எங்கும் இருட்டே இல்லாமல் பிரகாசமாக இருந்தது. லங்கைக்கு அதிஷ்டான தேவதையாக லங்காதேவி என்ற அரக்கி ஒருவள் இருந்தாள். அவள் தன் சுயரூபத்தோடு இருந்தாள். 

லங்கையின் அழகை அனுமன் வியத்தலும் லங்காதேவி அனுமனைக் கண்டு விடுதலும்

மேகங்களால் சூழப்பட்டு, நக்ஷத்திரக் கணங்கள் அதன் மீது ஒளி வீசி நகரை மேம்படுத்திக் கொண்டிருந்தன. கொடிகளில் இருந்த சலங்கை மணிகள் மெல்லிய ஒலி எழுப்பின. அனுமன் இக்காட்சியைக் கண்டு கொண்டே மதில் சுவரை வந்து அடைந்தார். நகரைச் சுற்றி கண்ணோட்டம் பார்த்து வியப்பில் ஆழ்ந்து போனார் அனுமன்.

அனுமன் இலங்கைக்குள் பிரவேசித்தலும் இலங்கையின் அழகைக் கண்ணுருதலும்

சீதையைப் பார்க்க முடியுமா என்ற கவலை ஒருபுறமும், அவரைக் கண்டு விடலாம் என்ற மகிழ்ச்சி ஒருபுறமும் அஞ்சனை மைந்தனுக்கு இருந்தது. தங்கமயமாக இருந்த லங்கை ராவணனுடைய புஜபல பராக்ரமத்தாலும், வீரம் கொண்ட அரக்கர்களாலும் பாதுகாக்கப்பட்டது.

லங்கைக்குள் நுழைவது குறித்து அனுமன் சிந்தனை செய்தல்

அரக்கர்களுக்குத் தெரியாமல் எந்த இடத்திலும் இருக்க இயலாது. அரக்கர் உருவம் கொண்டால் கூட அவர்கள் கண்ணில் படாமல் இருக்க முடியாது. இங்கு அவர்களுக்குத் தெரியாமல் காற்று கூட சஞ்சரிக்க இயலாது போல இருக்கிறது. என்னுடைய சுய வடிவமான மிகப் பெரிய குரங்கு வடிவத்தில் இங்கு இருந்தால் நான் நிச்சயம் அழிந்து போவேன். எனது எஜமானரின் காரியமும் கெட்டுப் போகும். எனவே இப்போது நான் இருக்கும் மிகப் பெரிய பரிமாணத்தைச் சுருக்கிக் கொண்டு சிறிய வடிவை ஏற்று இரவில் லங்கைக்குள் செல்வது தான் சுலபமான வழி. ராமரின் காரியமும் கைகூடும்

இரவு வரும் வரை அனுமன் காத்திருத்தல்

தற்காப்பு அமைப்புகள் பலமாக இருக்கின்றன, ராவணனும் சாதாரண எதிரி அல்ல. இங்கு தேவர்கள் கூட சுலபமாக யுத்தத்தில் வென்று விட முடியாது”, என நினைத்துக் கொண்டார். “அரக்கர்களின் நகரத்தினுள் இந்த உருவத்தோடு நுழையக் கூடாது. ஸீதையைத் தேடி வந்துள்ள நான் அவர்களை சாமர்த்தியமாக ஏமாற்றியே ஆக வேண்டும். லங்கையில் இரவில் தான் பிரவேசிக்க வேண்டும். சமயத்திற்கேற்றார்போல என் உருவத்தைக் காட்டியும், காட்டாமலும் இருக்க வேண்டும். மிகப் பெரிய பணியைச் செய்ய வேண்டியுள்ளதால் சமய சந்தர்ப்பம் பார்த்து தான் உள்ளே நுழைய வேண்டும்.

சமுத்திரத்தின் அக்கரையை அனுமன் அடைதல்

இவ்வாறு தனக்கு ஏற்பட்ட மூன்று தடைகளையும் தன் மதியூகத்தால் வெற்றிகரமாகக் கடந்துவிட்ட அனுமன் நூறு யோஜனை தூரத்தைக் கடந்திருந்தார். அப்போது நாலாபுறத்திலும் தன் பார்வையைச் செலுத்தினார் அஞ்சனை மைந்தன். அடுக்கடுக்கான காடுகளைக் கண்டார்.

அனுமன் ஸ்ம்ஹிகாவை வதம் செய்தல்

திடீரெனத் தன் வேகம் தடைப்படுகிறதே என எண்ணிய ஆஞ்சநேயர் சுற்றெங்கிலும் பார்த்தார். திடீரெனப் பின்னி இழுக்கப்பட்டு தடைப் பட்டிருக்கிறேனே இதன் காரணம் என்ன? என்னுடைய வீரம் மழுங்கி விட்டதே என்று சிந்திக்கலானார். அப்போது கடலில் வீற்றிருக்கும் ஒரு பெரிய உருவத்தைக் கண்டார். வானர ராஜனான சுக்ரீவன், “ஸாயாக்ராஹி” என்ற பூதத்தைப் பற்றி முன்னமே கூறி இருந்தது அவருடைய நினைவுக்கு வந்தது. “அது இது தானோ? நிழலைப் பற்றி இழுக்கக் கூடிய மாயசக்தி படைத்த பூதம் இதுவாகத் தான் இருக்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டார்.

அனுமன் முன்னே ஸுரஸா தோன்றுதலும், அனுமன் அவளை வெற்றி கொள்ளுதலும்

அனுமன் வாயுதேவனின் குமாரன். அவருக்கு நீ ஒரு தடங்களைச் செய்ய வேண்டும். ஒரு அரக்கியின் உருவத்தை எடுத்துக் கொண்டு மலையைப் போல பிரம்மாண்டமாய், பயங்கரமாய், கோரைப் பற்கள் வெளியே தெரிய கண்கள் சிவந்து கொண்டு, வாயை வெகு விகாரமாகப் பிளந்து கொண்டு அனுமன் முன்னே தோன்ற வேண்டும். அப்போது அனுமன் உன்னை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும். இது அவருக்கான ஒரு பரீக்ஷை.

ஆஞ்சநேயர் ஸமுத்திர ராஜன் மற்றும் மைனாகப் பர்வதத்தைக் கௌரவித்தலும், இந்திரன் மைனாகனுக்கு வரமளித்தலும்

ஸமுத்திர ராஜனால் தூண்டப்பட்ட மைனாகப் பர்வத சிரேஷ்டன் இவ்வாறு அன்பு கொண்டு கூறிய வார்த்தைகளால் மகிழ்ந்தார் வானரோத்தமன். அன்போடு தன்னுடைய கையினால் அம்மலையைத் தொட்டு புன்முறுவல் பூத்து, மனம் மகிழ்ந்து ஆகாச மார்க்கத்தில் தன் பயணத்தைத் தொடர்ந்தார். மைனாகனின் செயலினைக் கண்ட தேவேந்திரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

Scroll to top