இரவு வரும் வரை அனுமன் காத்திருத்தல்
தற்காப்பு அமைப்புகள் பலமாக இருக்கின்றன, ராவணனும் சாதாரண எதிரி அல்ல. இங்கு தேவர்கள் கூட சுலபமாக யுத்தத்தில் வென்று விட முடியாது”, என நினைத்துக் கொண்டார். “அரக்கர்களின் நகரத்தினுள் இந்த உருவத்தோடு நுழையக் கூடாது. ஸீதையைத் தேடி வந்துள்ள நான் அவர்களை சாமர்த்தியமாக ஏமாற்றியே ஆக வேண்டும். லங்கையில் இரவில் தான் பிரவேசிக்க வேண்டும். சமயத்திற்கேற்றார்போல என் உருவத்தைக் காட்டியும், காட்டாமலும் இருக்க வேண்டும். மிகப் பெரிய பணியைச் செய்ய வேண்டியுள்ளதால் சமய சந்தர்ப்பம் பார்த்து தான் உள்ளே நுழைய வேண்டும்.