தம்மீது பக்தி கொண்ட அப்பூதி அடிகளாரின் மூத்த குமாரன் பாம்பு தீண்டி இறந்து போக, அவனை திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்தார் திருநாவுக்கரசர். அப்பதிகம் விடந்தீர்த்த பதிகம் என அழைக்கப்படுகின்றது.
தீராப் பிணிகள் தீர்ந்து போக
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தற்பொழுது திருச்செங்கோடு என வழங்கும் கொடிமாடச் செங்குன்றூர் சென்று இறைவனை வணங்கி அங்கிருந்து புறப்பட்டு குடபுலத்துத் தலங்களைத் தரிசித்து திருநணா என்னும் தலம் இறைஞ்சி மீண்டும் கொடிமாடச் செங்குன்றூர் திரும்பி அங்கு உரையுங் காலத்தில் பனிக்காலம் வந்தணைய குளிர்சுரம் பரவி மக்களை வருந்தியது. திருஞானசம்பந்தருடன் உறையும் பரிசனங்களையும் அந்நாட்டில் அவர்கள் பயின்ற காரணத்தால் அக்குளிர் சுரம் பற்றியது.
அது கண்டு அந்நோய் தீர நமது ஞானசம்பந்தர் “அவ்வினைக்கிவ்வினை” என்றெடுத்து “ஐயர் அமுது செய்தவெவ்விடம் முன் தடுத்தெம்மிடர் நீக்கிய வெற்றியினால் எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது நீலகண்டம்” என்றே பதிகம் பாடியருளினார். அப்பதிகத்தினில் திருநீலகண்டம் என்ற குறிப்பினால் ஆணை நிகழ் அதன் காரணமாக அடியார்க்குமின்றி அந்நாடு முழுவதுமே குளிர்சுரம் நீங்கி நலம் பெற்றது. இன்றும் இத்திருப்பதிகத்தை நாள்தோறும் நியமமாகப் பாராயணம் செய்தால் சுரம் முதலிய கொடிய நோய்கள் பலவும் நீங்கிப் பெறுதல் ஆன்றோர்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.
தரித்திரம் நீங்கித் தனமுடன் வாழ
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். திருவாவடுதுறை (நாலடி மேல்வைப்பு) பண்: காந்தார பஞ்சமம். 3 ஆம் திருமுறை. திருச்சிற்றம்பலம் இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கி வேதியனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே [1] வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உன்கழல் விடுவேன் அல்லேன் தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று […]
இடர்கள் நீங்கி இன்பம் பெற – இடர் களையும் பதிகம்
திருப்பாற்றுறை, திருவெறும்பியூர்த் திருமலை முதலிய தளங்களை வணங்கிய திருஞானசம்பந்தப் பெருமான் திருநெடுங்களத்தையடைந்து இறைவனை அன்பால் “நில்பால் நேசம் செலாவததைத் தடுக்கும் இடும்பை தீர்த்தருள்வாய்” என்னுமிப் பதிகத்தைப் பாடியருளினார். ஒவ்வொரு திருப்பாடலிலும் ‘இடர் களையாய்’ என்ற குறிப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்கது. இதுபற்றியே இடர்களையும் திருப்பதிகமாய் பெரியோர்களால் கொள்ளப்பட்டுள்ளது.
தொல்வினைகள் தொலைந்து போக
1. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். திருப்பிரமபுரம். இது சீகாழி எனப் பிரசித்தமாய் வழங்கப்படும் தலம். சீர்காழி என்றும் வழங்கப்படுகிறது. விழுப்புரம் – மாயவரம் மார்க்கத்தில் சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து அரை மைல் தொலைவில் உள்ளது. பண்: நட்டபாடை. 1 ஆம் திருமுறை. திருச்சிற்றம்பலம். தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1) முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் […]