திருப்பாற்றுறை, திருவெறும்பியூர்த் திருமலை முதலிய தளங்களை வணங்கிய திருஞானசம்பந்தப் பெருமான் திருநெடுங்களத்தையடைந்து இறைவனை அன்பால் “நில்பால் நேசம் செலாவததைத் தடுக்கும் இடும்பை தீர்த்தருள்வாய்” என்னுமிப் பதிகத்தைப் பாடியருளினார். ஒவ்வொரு திருப்பாடலிலும் ‘இடர் களையாய்’ என்ற குறிப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்கது. இதுபற்றியே இடர்களையும் திருப்பதிகமாய் பெரியோர்களால் கொள்ளப்பட்டுள்ளது.
தொல்வினைகள் தொலைந்து போக
1. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். திருப்பிரமபுரம். இது சீகாழி எனப் பிரசித்தமாய் வழங்கப்படும் தலம். சீர்காழி என்றும் வழங்கப்படுகிறது. விழுப்புரம் – மாயவரம் மார்க்கத்தில் சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து அரை மைல் தொலைவில் உள்ளது. பண்: நட்டபாடை. 1 ஆம் திருமுறை. திருச்சிற்றம்பலம். தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1) முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் […]
லங்காதேவியை அனுமன் வெற்றி கொள்ளுதல்
லங்காதேவி பார்ப்பதற்கு விகாரமாக இருந்தாள். அவள் லங்கையின் காவல் தெய்வமாக நியமிக்கப்பட்டிருந்தாள். லங்கைக்குள் புகுந்த அனுமனை ஓங்கி அறைந்தாள் லங்காதேவி.
கண்ணன் அப்பூச்சி காட்டுதல்
கண்ணன் எம்பெருமான் பிறந்த சமயத்திலேயே நான்கு தோள்களோடு சங்கு சக்கரம் ஏந்திப் பிறந்தான். எனினும் அது கண்ட பயந்த தேவகி கேட்டுக் கொண்டதற்கிணங்க தன் இரு புஜங்களை மறைத்துக் கொண்டு சாதாரண குழந்தையாகவே தன்னைக் காட்டிக் கொண்டான்.
அஹிம்சா பரமோ தர்ம:
காதி என்று அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு விஸ்வாமித்திரன் என மகன் ஒருவன் இருந்தார். க்ஷத்திரிய வம்சத்தைச் சார்ந்த அரசனான விஸ்வாமித்திரன் அடிக்கடி கானகத்தில் வேட்டைக்குச் செல்வது உண்டு. ஒருசமயம் வேட்டையின் போது களைப்பு ஏற்படவே, கானகத்தின் அமைந்திருந்த முனிவர் ஒருவரின் ஆசிரமத்திற்கு வந்தார். அந்த ஆசிரமம் வஷிஷ்ட முனிவருடையது. வந்த விஸ்வாமித்திர மன்னனை வரவேற்ற வஷிஷ்டர் அவருக்குத் தேவையான உணவு நீர் யாவையும் கொடுத்து அவரை நல்ல முறையில் உபசரித்தார். வஷிஷ்டரிடம் நந்தினி என்ற காமதேனு […]
இலங்கை குறித்து அனுமன் சிந்தனை செய்தல்
பேரிகை முதலான வாத்தியங்களில் ஒலிகள் ஒரு பக்கமும், மக்கள் அணிந்திருந்த அணிகலண்களின் சலசலப்புகள் ஒரு பக்கமும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. லங்கை முழுவதும் தீபங்களின் ஒளி வெள்ளத்தால் எங்கும் இருட்டே இல்லாமல் பிரகாசமாக இருந்தது. லங்கைக்கு அதிஷ்டான தேவதையாக லங்காதேவி என்ற அரக்கி ஒருவள் இருந்தாள். அவள் தன் சுயரூபத்தோடு இருந்தாள்.
லங்கையின் அழகை அனுமன் வியத்தலும் லங்காதேவி அனுமனைக் கண்டு விடுதலும்
மேகங்களால் சூழப்பட்டு, நக்ஷத்திரக் கணங்கள் அதன் மீது ஒளி வீசி நகரை மேம்படுத்திக் கொண்டிருந்தன. கொடிகளில் இருந்த சலங்கை மணிகள் மெல்லிய ஒலி எழுப்பின. அனுமன் இக்காட்சியைக் கண்டு கொண்டே மதில் சுவரை வந்து அடைந்தார். நகரைச் சுற்றி கண்ணோட்டம் பார்த்து வியப்பில் ஆழ்ந்து போனார் அனுமன்.
அனுமன் இலங்கைக்குள் பிரவேசித்தலும் இலங்கையின் அழகைக் கண்ணுருதலும்
சீதையைப் பார்க்க முடியுமா என்ற கவலை ஒருபுறமும், அவரைக் கண்டு விடலாம் என்ற மகிழ்ச்சி ஒருபுறமும் அஞ்சனை மைந்தனுக்கு இருந்தது. தங்கமயமாக இருந்த லங்கை ராவணனுடைய புஜபல பராக்ரமத்தாலும், வீரம் கொண்ட அரக்கர்களாலும் பாதுகாக்கப்பட்டது.
How to enable remote access to MySQL database on Ubuntu Machine
In this article we shall see the steps to enable remote access to MySQL database which is available on a Ubuntu machine. Step 1 – Allow connections to clients other than localhost in MySQL Configuration file Allow MySQL connections from other clients in the configuration file. The MySQL configuration file will be available at /etc/mysql/mysql.conf.d […]
லங்கைக்குள் நுழைவது குறித்து அனுமன் சிந்தனை செய்தல்
அரக்கர்களுக்குத் தெரியாமல் எந்த இடத்திலும் இருக்க இயலாது. அரக்கர் உருவம் கொண்டால் கூட அவர்கள் கண்ணில் படாமல் இருக்க முடியாது. இங்கு அவர்களுக்குத் தெரியாமல் காற்று கூட சஞ்சரிக்க இயலாது போல இருக்கிறது. என்னுடைய சுய வடிவமான மிகப் பெரிய குரங்கு வடிவத்தில் இங்கு இருந்தால் நான் நிச்சயம் அழிந்து போவேன். எனது எஜமானரின் காரியமும் கெட்டுப் போகும். எனவே இப்போது நான் இருக்கும் மிகப் பெரிய பரிமாணத்தைச் சுருக்கிக் கொண்டு சிறிய வடிவை ஏற்று இரவில் லங்கைக்குள் செல்வது தான் சுலபமான வழி. ராமரின் காரியமும் கைகூடும்