எதற்காக வீடு வீடாக Pulse Oximeter கொண்டு சோதனை செய்யப்படுகிறது?
நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் (Red Blood Corpuscles) உள்ளன. இந்தச் சிவப்பணுக்களில் Hemoglobin எனப்படும் புரதம் இருக்கும். இந்த Hemoglobin இன் பணியாணது, ஆக்சிஜனைத் தன்னோடு சுமந்து ஏனைய உடலுறுப்புகளுக்கு எடுத்துச் சென்று அவை Aerobic Respiration மூலமாக ஆக்சிஜனைப் பெற உதவும்.
Hemoglobin இரும்பு அணு கொண்டு ஒரு புரதம் ஆகும். ஆக்சிஜன் Hemoglobin ஓடு மிக எளிதில் ஒட்டிக் கொள்ளும். (நமது பள்ளிப் படிப்பில் Zoology இல் Oxygen has affinity towards Hemoglobin எனப்படித்தது நினைவிருக்கலாம்).
இவ்வாறாக ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளதென்பதைக் காட்டும் கையடக்க கருவியே Pulse Oximeter ஆகும். சாதாரண மனிதர் ஒருவருக்கு ரத்தத்தில் Oxygen saturation அளவு 95 குறைந்தது இருக்கும். ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு, கொரோனா வைரசின் புரதமானது Heme இன் Fe ion ஓடு சேர்ந்து கொண்டு ரத்த ஓட்டத்தில் கலப்பதால் Hemoglobin ஓடு சேரும் ஆக்சிஜன் அளவு குறையத் துவங்கும். எனவே இரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் சாச்சுரேஷனின் அளவும் குறையத் துவங்கும்.
Pulse Oximeter மூலம் ரத்த ஆக்சிஜன் அளவைத் தெரிந்து கொள்ளும் போது ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தால் உடனடியாக PCR Test எடுக்கப் பரிந்துரைத்து கொரோனா இருக்கிறதா என்பதைக் கண்டு கொள்ளலாம்.
ஒருவேளை கொரோனா இல்லையென்றாலும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது Hypoxia எனப்படும் மருத்துவப் பிரச்சினை என்பதால் உடனடியாக மருத்துவரை அணுக அறிவுறுத்தப்படும்.
Hypoxia என்பது ஆபத்தான நிலையாகும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் போது மற்ற உறுப்புகளுக்குத் தேவாய்ய அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் அவை பாதிக்கவோ இல்லையேல் முழுமையாக செயலிழக்கவோ நேரிடும்.
ஒரு குழந்தை பிறந்தவுடன் அது அழவில்லை, சுவாசத்தைத் தொடங்கவில்லை எனும் சமயத்தில் CPR, Intubation முதலான எமெர்ஜென்சி புரொசீஜர்கள் செய்வதற்கு இது ஒரு முக்கியமான காரணமாகும். Hypoxic Insult எனும் இந்தவகை பாதிப்பினால் மூளைச் சாவு, கிட்னி செயலிழப்பு, Motor Nerves பாதிப்படைதல் போன்றவை ஏற்பட்டு விடும்.
ஆகவே அடுத்தமுறை மாநாகராட்சிப் பணியாளர்கள் உங்கள் ஆட்காட்டி விரலில் Pulse Oximeter கொண்டு சோதனை செய்யும் சமயத்தில் அவர்களுக்கு முகம் சுளிக்காமல் ஒத்துழையுங்கள். எதற்காக இந்தச் சோதனை என்று புரிந்து கொள்ளுங்கள்.
Why everyone is being checked with Pulse Oximeter by the Greater Chennai Corporation?