திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

ஸ்ரீ வைத்தமாநிதி பெருமான் கோவில் கொண்ட திருத்தலம் திருக்கோளூர். அப்பெருமானை சேவிக்க உடையவர் ஆழ்வார்திருநகரியிலிருந்து திருக்கோளூர் வந்தார். அவர் அவ்வூர் வந்த சமயம் ஒரு பெண்பிள்ளை சோகத்தோடு அழுது கொண்டே வெளியேறினாள்.

திருக்கோளூர் “புகும் ஊர்” என அழைக்கப்படும் ஊர். இதற்குக் காரணம், ஸ்ரீவைத்தமாநிதிப் பெருமாளின் அழகைக் கண்டு சேவித்தவர்கள் அந்த அழகை நித்தமும் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அவ்வூரை விட்டு வெளியேற மாட்டர். எனவே அந்த ஊரில் ஒரு முறை புகுந்தவர் திரும்ப வெளியேற மாட்டார்களானபடியால் அப்படி அழைக்கப்பெற்றது.

Shri Ramanujar

ஆனால், உடையவரானவரோ அங்கு நுழைகையில் பெண்ணொருவள் அவ்வூரை நீங்குவது கண்டு ஆச்சரியப்பட்டவர், அவளிடம் காரணம் கேட்டார். அதற்கு அந்தப் பெண்பிள்ளை வைஷ்ணவத்தில் சிறப்பாகப் போற்றபடும் 81 குணங்களைக் கூறி இவற்றில் எதுவுமில்லாமல் இருக்கும் தனக்கு அந்தப்பெரும் ஊரில் இருக்கத் தகுதி யாது எனக் கூறி வருந்தினாள்.

அவள் கூறிய அந்த 81 குணங்கள் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் எனப் போற்றபடுகின்றது.

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்
Scroll to top