அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே

நந்தகோபரின் உறவினர் அக்ரூரர். கம்சனிடம் அரசவைப் பணியாளராக இருந்தார் அக்ரூரர். கண்ணன் மேலே மிகுந்த பக்தி கொண்டவர். கண்ணனைக் கொல்லத் திட்டம் தீட்டிய கம்சன் அவரை அழைத்து வர நம்பகமான ஒருவரைத் தேடியபோது அவனுக்கு அக்ரூரரைப் பற்றிய நினைவு வர, அக்ரூரரை அழைத்து கண்ணனைக் கூட்டி வரச் சொன்னான்.

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

ஸ்ரீ வைத்தமாநிதி பெருமான் கோவில் கொண்ட திருத்தலம் திருக்கோளூர். அப்பெருமானை சேவிக்க உடையவர் வந்த சமயம் ஒரு பெண்பிள்ளை சோகத்தோடு வெளியேறினாள். அவள் வெளியேற கூறிய காரணங்களே திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்.

சுமித்திரை லக்ஷ்மணனிடம் கூறியது!

“மகனே! ராமனின் பின்னால் செல், தம்பியாய் அல்ல. ஒரு அடியாராய் அவனுக்குச் சேவகம் செய்வாய். அவன் திரும்ப இந்நகர் வந்தானெனில் நீயும் வா. ஒருவேளை அவன் இறந்து போவானென்றால் அவனுக்கும் முன்னதாகவே நீ முடிந்து போய் விடு”. என்றாள்.

சக்ரத்தாழ்வார் வைபவம்

திருமாலுக்குப் பிரதானமாக ஐந்து ஆயுதங்கள் உண்டு. ஆகையால் அவருக்குப் பஞ்சாயுதன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. திருமால் தன் சங்கல்ப்ப சக்தியை ஒரு ஆயுதமாக உருவாக்கி, அதை ஆயுதங்களின் அரசனாக ஆக்கினார். அதுவே ஸ்ரீசுதர்சனச் சக்கரம் ஆகும். ஆயுதங்களின் அரசன் என்பதால் இவருக்கு “ஹேதி ராஜன்” எனும் திருநாமம் கிட்டியது.

அகால மரணமும் துர்மரணமும் விலக – விடந்தீர்த்த திருப்பதிகம்

தம்மீது பக்தி கொண்ட அப்பூதி அடிகளாரின் மூத்த குமாரன் பாம்பு தீண்டி இறந்து போக, அவனை திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்தார் திருநாவுக்கரசர். அப்பதிகம் விடந்தீர்த்த பதிகம் என அழைக்கப்படுகின்றது.

Scroll to top